விமர்சனம்

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் (பட விமர்சனம்)

படம்: கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்
நடிப்பு: அசோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன்
தயாரிப்பு:சி.வி.குமார்
இசை: ஹரி டப்யூசியா
ஒளிப்பதிவு: கார்த்திக் கே.தில்லை
டைரக்‌ஷன்:சி.வி.குமார்

இஸ்லாம் மதத்தை சேர்ந்த அசோக் இந்துப் பெண் பிரியங்கா ருத்தை காதலித்து மணக்கிறார். குடும்பத்தினர் திருமணத்துக்கு சம்மதிக்காததால் இஸ்லாம் மதத்துக்கு மாறி காதலனை மணக்கிறார் பிரியங்கா ருத். தனி வீட்டில் தங்கி ஜாலியாக இல்லற வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். வேலைக்காக வேலு பிரபாகரனிடம் அக்கவுண்ட்டன்ட்டாக சேர்கிறார் அசோக். திடீெரன்று அவரை வெளியூருக்கு அனுப்பி வைக்கின்றனர். திரும்பி வீட்டுக்கு வரும் அசோக்கை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளுகின்றனர். கண்ணெதிரேலேயே கணவர் சுடப்படுவதை கண்டு அதிர்ச்சி அடையும் பிரியங்கா பழிக்குபழி வாங்க முடிவு செய்கிறார். அதற்காக டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். அவரும் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளிக்கிறார். துப்பாக்கியுடன் வெறிகொண்டு திரும்பி வரும் பிரியங்கா ருத் வேலுபிரகாரன் அவரது மகன்கள்மற்றும் கூட்டத்தினரை எப்படி பழிவாங்குகிறார் என்பதை ரத்தம் கொப்பளிக்க சொல்கிறது கிளைமாக்ஸ். 
கேங்க்ஸ்டர் கதை என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு கணிப்புடன் போய் படத்தில் அமர்ந்தால் இது அதிரிபுதிரி கேங்க்ஸ்டராக இருக்கிறது. யார் யாரை எப்போது போட்டுத்தள்ளுவார்கள் என்று தெரியாமல்தான் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கின்றன. ஹீரோ அசோக்கிற்கு சிறிய வேடம்தான். ஆனால் அவரை சுற்றித்தான் முழுகதையும் சுழல்கிறது. 
கணவரை சுட்டு தள்ளியவர்களை பழிவாங்க முடிவு செய்யும் பிரியங்கா ருத் இன்னொரு விஜயசாந்தியாக ஆக்‌ஷன் அதிரடி நடத்தியிருக்கிறார். பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது போலீஸ் ஜீப்பில் வரும் இரண்டு போலீசாரை கண்டு கோபம் அடைவதும். மெதுவாக அவர்களை நெருங்கி சென்று நடுரோட்டில் சுட்டு தள்ளியதும் வேடத்துக்கு கெத்து சேர்க்கிறார். இனிமேல் இவர் கேங்க்லீடர் ஆகிவிடுவார் என்று எண்ண வைத்து பின்னர் அந்த வேலை எனக்குவேண்டாம், பழிவாங்குற வேலை மட்டும்தான் செய்வேன் என்று விலகும்போது கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறார் இயக்குனர் சி.வி.குமார்.

வேலுபிரபாகரனின் பிள்ளைகளை துடிக்க துடிக்க அடித்தும், எரித்தும் கொல்லும் காட்சிகளில் பதற வைக்கிறார் பிரியங்கா. தன்னை வலைவீசி தேடும் போலீஸ் அதிகாரி நரேன் தனது பெற்றோரை விசாரணைக்காக அழைத்து வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் நரேனை போனில் தொடர்புகொள்ளும் பிரியங்கா ருத் அவரிடம் நறுக்கு தெறிக்க கேள்வி கேட்டு இணைப்பை துண்டிக்கும்போது அவர் பேசிய வசனத்துக்கு எதிரொலியாக அரங்கில் சலசலப்பு எழுகிறது. 
துப்பாக்கி எடுத்தவருக்கு துப்பாக்கியால்தான் சாவு என்ற மெசேஜுடன் படத்தை முடித்திருக்கிறார்கள். 
ஹரி டப்யூசியாவின் இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. 

கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்-கேங்க் வார்

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close