விமர்சனம்

குடிமகன் (பட விமர்சனம்)

படம்: குடிமகன்

நடிப்பு: ஜெய்குமார், ஜெனிபர், பாவா செல்லதுரை, ஆகாஷ், கிருஷ்ணமூர்த்தி, வீரசமர், முருகேசன், கிரண், பாலாசிங்
ஒளிப்பதிவு: சி.டி.அருள்செல்வன்
இசை: எஸ்.எம்.பிரசாந்த்
தயாரிப்பு-இயக்கம்: சத்தீஷ்வரன்

அழகான மனைவி, அன்பான மகன் என சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார் ஜெய்குமார். அந்த ஊர் கவுன்சிலர் தனது தோட்டத்தில் மதுகடை திறக்கிறார். ஊர் மக்களுடன் சேர்ந்து ஜெய்குமாரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஒரு மாதத்தில் மதுகடை மூடுவதாக கூறி எஸ்ஸாகி றார் கவுன்சிலர். நாளாக நாளாக ஊரில் ஆண்கள் பலர் குடிக்கு அடிமையாகிறார்கள். ஜெய்குமாருக்கும் குடிப்பழக்கம் ஏற்படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல தீவிர குடிகாரனகிறார். இதனால் மனைவி, மகன் வெறுப்புக்கு ஆளாகிறார். குடும்பத்தில் தகராறு ஏற்பட மகன் மீது சத்தியமாக இனி குடிக்க மாட்டேன் என உறுதி அளிக்கிறார். ஆனாலும் நண்பர்கள் மீண்டும் அவனை குடிப்பழக்கத்துக்கு ஆளாக்குகின்றனர். இந்நிலையில் கந்து வட்டிக்கடன் கொடுத்தவன் ஜெய்குமாரை பணம் கேட்டு தொல்லை செய்கிறான். அதன்பிறகு ஜெய்குமாரின் மனைவி எடுக்கும் முடிவு அதிர்ச்சி கிளைமாக்ஸாக அமைக்கிறது.

நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத ஊரை தேர்வு செய்து அந்த ஊருக்குள்ளேயே முழுகதை யையும் முடித்திருக்கிறார் இயக்குனர் சத்தீஷ்வரன். மகன் ஆகாஷை தோளில் சுமந்துகொண்டு பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது அவனுக்கு கூறும் அறிவுரைகள் எல்லா பிள்ளைகளுக்கு மான அறிவுரையாகவே அமைகிறது. இந்த உலகத்திலேயே நான்தான் ரொம்ப சந்தோஷ மானவன் என்று மனைவி ஜெனிபர். மகன் ஆகாஷை கட்டிப்பிடித்துக்கொண்டு மகிழ்ச்சி வெளியிடும் ஹீரோ ஜெய்குமார் வாழ்க்கைக்கு பின்னால் ஏதோ பெரிய வேதனை ஒளிந்திருக் கிறது என்ற யோசனையும் மண்டையை குயைட ஆரம்பித்துவிடுகிறது. மெல்ல மெல்ல ஜெய்குமார் குடிக்கு அடிமையாகும்போது முன்னர் யூகித்த சீன் உண்மையாகிவிட்டதே இனி இந்த குடும்பத்தின் பாடு திண்டாட்டம்தான் என்ற மற்றொரு யூகமும் அடுத்தடுத்த காட்சிகளில் நிஜமாகும்போது மனம் கலங்குகிறது.

அசல்குடிமகனாகி ரோடோரத்தில் வேட்டி அவிழ்ந்து விழுந்து கிடக்கும் ஜெய்குமார் பலரது யதார்தத்தை பிரதிபலிக்கிறார். கணவனை குடியிலிருந்து மீட்க ஜெனிபர் முயற்சிக்கும் காட்சிகளின்போது தெளிவான நடிப்பை வெளியிட்டிருக்கிறார். கணவனுடன் கைகலப்பில் ஈடுபடும்போதும் அவரது தரப்பில் நியாயம் மிஞ்சி நிற்கிறது. தாலியை திருடிச் சென்று கணவர் குடித்ததும் கோபித்துக்கொண்டு விட்டைவிட்டு வெளியேறும் ஜெனிபர் இறுதியில் கணவரை திருத்த வழி தெரியாமல் எடுக்கும் அந்த விபரீத முடிவு அரங்கையே அமைதிக்கடலில் ஆழ்த்துகிறது. 


தந்தையிடம் அன்புகாட்டும்போதும் சரி, குடிகாரன் ஆனபிறகு தந்தையை வெறுத்து என் பின்னால் வரதே போ என்று விரட்டும்போதும்சரி சிறுவன் ஆகாஷ் பெரிதாகவே நடித்திருக்கிறான்.
கவுன்சிலராக வரும் கிரண் ஓவர் பந்தா செய்யாமல் அளவுடன் வில்லத்தனத்தில் மிளிர்கிறார். ஜெய்குமாரின் நண்பர்களாக வருபவர்கள் யதார்த்தமாக நடித்து குடிப்பழக்கத்துக்கு அவரை அடிமையாக்குவதும் பல இடங்களில் நடக்கும் நடப்புக்கு சாட்சி. வீரசமரின் குடிகார நடிப்பும். காமெடியும் தமாஷ்.
சி.டி.அருள்செல்வன் ஒளிப்பதிவு தெளிவு. இசையில் எஸ்.எம்.பிரசாத் இன்னமும் மெருகேற்றியிருந்தால் பல காட்சிகளுக்கு உயிர்கிடைத்திருக்கும். என்ன சொல்லவேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்துகொண்டு அதிலிருந்து பின்வாங்காமல் நினைத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சத்தீஷ்வரன்.
குடிமகன்-குடிகாரர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close