விமர்சனம்

கீ (பட விமர்சனம்)

படம்: கீ

நடிப்பு: ஜீவா, நிக்கி கல்ராணி, அனய்கா சோடி, ஆர்.ஜே.பாலாஜி, கோவிந்த் பத்மசூர்யா, சுஹாசினி, ராஜேந்திர பிரசாத் மனோபாலா, மீராகிருஷ்ணன்
தயாரிப்பு: மைக்கேல் ராயப்பன், எம்.சேராபின்ராயா சேவியர்
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு: அபிநந்தன ராமானுஜம்
இயக்கம்: காளீஸ்

கல்லூரியில் படித்து வரும் ஜீவா கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தெரிந்து வைத்திருப்பதுடன் மற்றவர்களது போன்களை ஹேக் செய்யும் வித்தையும் தெரிந்தவர். அவரை காதலிக்கிறார் நிக்கி கல்ராணி. ஊரில் அவ்வப்போது கொலை, தற்கொலை, விபத்து ஏற்படுத்தி கொல்வதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. இதற்கெல்லாம் மற்றவர்களின் கம்ப்யூட்டரை ஹேக் செய்து அவர்களின் ரகசியங்களை திருடும் கோவிந்த் பத்மசூர்யாதான் காரணம் என்பது ஜீவாவுக்கு தெரியவருகிறது. அவரை தான் கண்டுபிடித்த பாட்ஷா வைரஸை கொண்டு ஹேக் செய்து தேடுவதில் மும்முரம் காட்டுகிறார் ஜீவா. இதையறிந்து அதிர்ச்சி அடையும் கோவிந்த், ஜீவாவை கொல்ல ஆட்களை அனுப்புகிறார். இதற்கிடையில் நிக்கி கல்ராணியை கடத்தி வைத்துக் கொண்டு ஜீவா தனது கட்டளைக்கு பணிய சொல்கிறார் கோவிந்த். அதற்கு பணியாமல் அதே கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை் பயன்படுத்தி கோவிந்த்தை எப்படி கண்டுபிடித்து அழிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
சகட்டு மேனிக்கு வந்துகொண்டிருக்கும் கம்ப்யூட்டர் ஹேக்கர்ஸ் கதைகளில் ஒன்றுதான் கீ படம் என்று சொல்லி கடந்து சென்றுவிட முடியாதபடி மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு அம்சங்களை கதையில் புகுத்தியிருக்கிறார் இயக்குனர்.
பஃப்பில் அமர்ந்துகொண்டு அங்கிருக்கும் பெண்களின் செல்போன்களை ஹேக் செய்து அந்த பெண்களுக்கு என்னெவெல்லாம் பிடிக்கும் என்பதை அவர்களிடமே அடுக்குவதும், அழகான பெண்ணை கண்டு அவரை தன் வலையில் வீழ்த்த முயல்வதுமாக ஆரம்பத்தில் ரொமான்டிக் பாய் ஆக சுற்றி வருகிறார்.
தனது தோழி ஒருவரரின் தற்கொலைக்கு பிறகுதான் நகரில் நடக்கும் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் வில்லன் கோவிந்ததான் காரணம் என்பதை அறிந்து அவரை கண்டு பிடிப்பத்தில் வேகம் காட்டுகிறார் ஜீவா. ஒவ்வொருமுறை நெருங்கும்போதும் வில்லன் எஸ்கேப் ஆவதும் ஒரு கட்டத்தில் ஜீவாவுக்கு பதிலாக அவரது தந்தையை காரில் அடித்து சாய்ப்பதுமாக காட்சிகள் அதிர்கின்றன. கடைசி முயற்சியாக நிக்கியை கடத்தி வைத்துக்கொண்டு ஜீவாவை சாகச் சொல்லும்போது த்ரில் அதிகரிக்கிறது.

நிக்கி கல்ராணியை கொஞ்சம் லேட்டாக வந்தாலும் கிளைமாக்ஸ் த்ரில்லுக்கு பயன்பட்டிருக் கிறார். இன்னமும்கூட அவருக்கு சில பல காட்சிகளை தந்து திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பயன்படுத்தியிருக்கலாம். ஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே சிரிப்பு விதை தூவுகிறார்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உள்ளே புகுந்து விளையாடியிருக்கிறார் இயக்குனர் காளீஸ். பெண்ணின் காரை தூரத்திலிருந்து இயக்கி அவரை வில்லன் கொல்வது, இதயம் இயங்குவதற் காக பொருத்தப்பட்ட பேஸ் மேக்கர் கருவியை இயக்கி ஒருவரை சாகடிப்பதெல்லாம் விறுவிறுப்பான காட்சியாக இருந்தாலும் இது எப்படி சாத்தியமாகும் என்ற சந்தேகமும் எழுகிறது. படத்தின் தொடக்க காட்சிகளில் வரும் அந்த கிளுகிளு வசனங்களையும் தவிர்த்திருக்கலாம்.
விஷால் சந்திரசேகர் இசை ஓ.கே. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு படத்தை பிரமாதமாக்கியிருக்கிறது. 
‘கீ’ கம்ப்யூட்டர் வைரஸ் துரத்தல்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close