விமர்சனம்

கிரிஷ்ணம் (பட விமர்சனம்)

படம்: கிரிஷ்ணம்
நடிப்பு:அக்‌ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ், சாய்குமார், சாந்திகிருஷ்ணா

தயாரிப்பு: பி.என்.பலராம் 
இசை: ஹரி பிரசாத்
ஒளிப்பதிவு: தினேஷ் பாபு
இயக்குனர்: தினேஷ் பாபு

கல்லூரியில் முதலாமாண்டு மாணவரான அக்‌ஷய்கிருஷ்ணன் பணக்கார வீட்டு பிள்ளையாக இருந்தாலும் நண்பர்களுடன் எளிமையாகவே பழகுகிறார். அதேகல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா உல்லாஸை பார்த்ததும் காதல் மலர்கிறது. அவரிடம் எப்படியாவது நட்பை வளர்த்துக்கொண்டு காதலியாக்கிக்கொள்ளலாம் என எண்ணுகிறார் அக்‌ஷய். ஐஸ்வர்யாவோ அவரது காதலை ஏற்காமல் நழுவிச் செல்கிறார். ஒரு கட்டத்தில் தான் இந்த சாதியை சேர்ந்தவர்கள் எங்கள் குடும்பத்தில் கட்டுப்பாடு அதிகம். காதலிப்பதெல்லாம் நடக்காது என்று அக்‌ஷய்யிடம் நேருக்கு நேர் சொல்கிறார் ஐஸ்வர்யா அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் விடாமல் முயற்சிக்கிறார். அதன்மூலம் ஐஸ்வர்யாவுடன் நட்பு ஏற்பட அவரை தனது நடன குழுவில் இணைநத்து நடனப்போட்டிக்கு தயார் ஆகிறார் அக்‌ஷய். மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மயங்கிவிழும் அக்‌ஷயை டாக்டரிடம் அழைத்துச் சொலகிறார்கள். அவர்களோ அக்‌ஷய்க்கு அரிய வகை நோய் எற்பட்டிருப்பதாகவும் உயிர் பிழைக்க ஒரு சதவீதம் மட்டும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். குருவாயூர் கிருஷ்ணன் பக்கத ரான அக்‌ஷய்யின் தந்தை சாய்குமார் மகனை காப்பாற்ற வேண்டிக்கொள்கிறார். அவரது ேவண்டுகோளை குருவாயூர் சாமி நிறைவேற்றுகிறாரா என்பதற்கு படம் பதில் அளிக்கிறது.

மேடையில் ஹீரோ அக்‌ஷய்கிருஷ்ணன் நடனம் ஆடி மயங்கி விழுவதில் தொடங்கும் படம் பிளாஷ்பேக்காக விரிகிறது. கல்லூரியில் நல்ல நண்பர்கள் வட்டாரத்தில் அக்‌ஷயின் சின்ன சேட்டைகள் தொடர்கிறது. மாணவி விடுதியில் கேமிராவை வைத்ததால் அதன் மூலம் பெண்களின் அந்தரங்க விஷயங்களை பார்த்து ரசிக்கும் செக்யூரிட்டியை நெய்ய புடைப்பதும், கேமராவை அகற்ற மறுக்கும் விடுதி வார்டனுக்கு பாடம் புகட்ட அவரது பாத்ரூம் குளியல் வீடியோவை படமாக்கியதாக சொல்லி கலயாப்பதும் சிறுபிள்ளை விளையாட்டுக்கள். 
ஐஸ்வர்யா உல்லாஸை கண்டதும் காதலில் விழும் அக்‌ஷய் அவரையே சுற்றி சுற்றி வட்டமடிப்பதும், தன் காதலை அவரிடம் வெளிப்படுத்த முடியாமல் தவிப்பதும் வழக்கமான காட்சிகள். உன் ஆளிடம் இப்படி காதலை சொல் என்று தந்தை சாய்குமாரே மகன் அக்‌ஷய்க்கு ஐடியா கொடுத்து காதலுக்கு சப்போர்ட் செய்வது ருசிகரம்.
நான் இந்த பிராமணப்பெண். எங்கள் குடும்பத்தில் காதலிப்பது யாருக்கும் பிடிக்காது. ஆசாரங்களுடன் வாழ்ந்து வருகிறேன். என்னிடம் காதலை எதிர்பார்க்காதே என்று நேருக்குநேர் அக்‌ஷயிடம் ஐஸ்வர்யா சொல்வது பளார். அதற்காக தாடி வளர்த்துக்கொண்டு அலையாமல் அடுத்த வேலையை பார்க்க அக்‌ஷய் நகரும்போது படத்தில் காதலைவிட வேறுஏதோ ஒரு விஷயத்தை இயக்குனர் சொல்லவருவதை புரிந்துகொள்ள முடிகிறது. முதல்பாதி மந்தமாக நகர்ந்தாலும் 2ம் பாதி விறுவிறுப்பு கூட்டுகிறது. 
உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்‌ஷய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அதிர்ச்சி அடையும தந்தை என் மகன் உயிர்பிழைக்க எவ்வளவு சதவீதம் வாய்ப்பிருக்கிறது என்று கேட்க டாக்டரோ,’அவன் உயர்பிழைக்க ஒரு சதவீதம்தான் வாய்பப்பிருக்கிறது’ என்று தந்தையின் நம்பிக்கையை நொறுக்கும்போது பகீரென்கிறது. என் மகனை குருவாயூரப்பன் காப்பாற்றுவான் என்று அக்‌ஷயின் தந்தை கூறும்போது தெய்வநம்பிக்கையின் ஆழத்தை உறுதிபடுத்திக் கொள்கிறார்.
80களில் வெளியான மணல்கயிறு, பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ஹீரோயினாக நடித்த சாந்திகிருஷ்ணா அக்‌ஷயின் தாயாக நடித்திருக்கிறார். இதன்மூலம் அம்மா நடிகைகளில் கூடுதலாக ஒருவரை கோலிவுட் பெறுகிறது. 

அக்‌ஷய்கிருஷ்ணன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தைத்தான் கிரிஷ்ணம் படமாகியிருக்கிறது. முழுக்க பக்தி படம்போல் இல்லாமல் கடவுள் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் படமாக கல்லூரி கலாட்டா விஷயங்களையும் கலந்து உருவாகியிருக்கிறார் இயக்கியிருக்கிறார் தினேஷ்பாபு. ஹரிபிரசாத் இசை ஓ.கே. 

கிரிஷ்ணம்- பக்தியின் உண்மை  கதை

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close