அரசியல்சினிமா செய்திகள்பொது செய்திகள்

காஷ்மீர் விவகாரம்; பாகிஸ்தான் தடாலடி முடிவு

வர்த்தக உறவு- ரயில் சேவை நிறுத்தம்

புது டெல்லி: பாஜ அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா.  காஷ்மீர் மாநிலத்தை  ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசமாக பிரித்து சட்டம் இயற்றப்பட்டதை அறிவித்தார்.. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக இந்திய தூதரை திருப்பி அனுப்புவது, வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வது, வான் வழி பாதையை மூடுவது என பாகிஸ்தான் சில முடிவுகளை எடுத்து அறிவித்தது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி தந்துதுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்திய உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் எடுத்திருக்கும் முடிவு தன்னிச்சையானது. இது இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கும்.
காஷ்மீர் குறித்த முடிவுகள் பாகிஸ்தானுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதில் அச்சரியமில்லை. பாகிஸ்தானின் தன்னிச்சையான முடிவுகள் இரு நாட்டு நல்லுறைவு பாதிக்கும் என்பதால், பாகிஸ்தான் தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தியாவின் அதிகார வரம்பில் பாகிஸ்தான் தலையிட முற்படுவது ஒருபோதும் சரியாக இருக்காது.
இவ்வாறு  இந்தி வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது.

இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. பாகிஸ்தா னின் வாகா எல்லையில் இருந்து அட்டாரி நோக்கி வந்து கொண்டிருந்த சம்ஜவுதா விரைவு ரயில் பாதி வழியில் பாகிஸ்தான் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரயிலில் இருந்த இந்திய பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து மூத்த ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய ரயில்வேயை தொடர்பு கொண்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக சம்ஜவுதா விரைவு ரயில் நிறுத்தப்படுவதாக அறிவித்தனர். எந்த பாதுகாப்பு பிரச்னையும் இல்லை, உடனடியாக ரயில் அட்டாரி எல்லையை வந்தடைய வேண்டும் என்று நாங்கள் கூறினோம் என்று தெரிவித்தார்.
அப்படி பாதுகாப்பு பிரச்னை ஏற்பட்டால், சம்ஜவுதா விரைவு ரயிலை, இந்திய ஊழியர்களும், இந்திய பாதுகாவலர்களும் வழி நடத்தி வருவார்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். சம்ஜவுதா என்பது இந்தியில் ஒப்பந்தம் என்று அர்த்தமாகும். இந்த ரயிலில் 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் ஏசி 3 டயர் பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் தற்போது டெல்லியில் இருந்து இந்திய எல்லையான அட்டாரிக்கும், அங்கிருந்து பாகிஸ்தானின் லாகூர் முதல் வாகா வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து இந்திய தூதரை திருப்பி அனுப்பவும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்ளவும் பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், சம்ஜவுதா விரைவு ரயில் சேவையை நிறுத்தியதோடு, பாகிஸ்தானில் இந்திய சினிமாக்களை திரையிடவும் தடை விதித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் பிரச்னையை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close