அரசியல்சினிமா செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி சரத் உண்ணாவிரதம்

கறுப்பு சட்டை அணிந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
இன்று (ஏப் 25) காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. கறுப்புசட்டை அணிந்து வந்தார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.. அதேபோல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்..
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மேலும் உண்ணாவிரதம் இருந்தவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.
முன்னதாக சரத்குமார் .*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து கருப்பு சட்டையை அணிவோம்* என்றார், வ்-உண்ணவிரதபோராட்டத்துக்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.  

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close