அரசியல்சினிமா செய்திகள்திரை பிறமொழிபொது செய்திகள்

கார் விபத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் மரணம்

என்.டி.ராமராவ் மகன், ஜூனியர் என்டிஆர் தந்தை

ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதண் மந்திரி என்.டி ராமாராவின் மகனும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா இன்று (ஆக 29) சாலை விபத்தில் உயிரிழந்தார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி – அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் பலமுறை உருண்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா. அவரை காரிலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்..
ஹரிகிருஷ்ணா எம்.பியாக பதவி வகித்ததுடன். ஆந்திர மாநில ம்ந்திருயாக்வும் இருந்திருக்கிறார். மேலும் 10க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து புகழ்பெற்றிருந்தார். ஹரிகிருஷ்ணா மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள். திரையுலகினர், கட்சி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஐதராபாத் நகரின் அருகே முருதுழகுடா பகுதியில் உள்ள என்.டி.ஆர். குடும்பத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஹரிகிருஷ்ணாவின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறது. ஹரிகிருஷ்ணாவின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close