விமர்சனம்

காதல் மட்டும் வேணா (பட விமர்சனம்)

நடிப்பு: சாம கான், எலிசெபத், தியான்கனா, மாரிமுத்து, ஈ.ராமதாஸ், ராஜ்மோகன்
தயாரிப்பு: லக்கி ஸ்டுடியோஸ்
இசை: சாந்தன் அனேபஜகனே
ஒளிப்பதிவு: ஜேஎஸ்கே
இயக்கம்: சாம் கான்

டெல்லியில் பஸ்சில் நடந்த பலாத்கார சம்பவம்போல் தொடங்கும் காட்சி திடீரென்று வேறு தளத்துக்கு செல்கிறது. மனஉளைச்சலில் தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு உதவும் மையம் ஒன்றில் வேலைபார்ப்பவர் தனக்கு வரும் போன் அழைப்பால் கடுப்பாகிறார். அவருக்கு ஓனர் டோஸ்விடுகிறார். அந்த கடுப்பில் தனக்கு வரும் அழைப்பை கால் டைவர்ட் செய்து திருப்பிவிடுகிறார். அது உதவி இயக்குனர் விஜய்க்கு செல்கிறது. மறுமுனையில் தற்கொலை செய்ய உள்ளதாக சொல்பவரை சமாதானப்படுத்தி தற்கொலையிலிருந்த மீட்கிறார். அதேபோல் மற்றொரு பெண்ணையும் தற்கொலையிலிருந்து மீட்கிறார். உயிர் பிழைத்த பெண் மறுநாள் விஜய்க்கு போன் செய்து நேரில் சந்திக்க அழைக்கிறார். நேரில் சந்திக்கும் விஜய் அந்த பெண்ணை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் திடீரென காணாமல்போகிறார். காதலி காணாமல்போனதுபற்றி போலீசில் புகார் தருகிறார். போலீசோ அந்த பெண் நீண்ட நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக சொல்கின் றனர். அதிர்ச்சி அடையும் விஜய் குழப்பத்துடன் வெளியேறுகிறார். இடைவேளைக்கு பிறகு மற்றொரு கதை தொடங்குகிறது. அது முடிவடையாமலே என்ட் கார்ட் போடப்படுகிறது. 
முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லிவிடுவது சரியாக இருக்கும். இப்படத்தை பார்ப்பவர்கள் கண்டிப்பாக கிளைமாக்ஸ் எங்கே என்று கேட்பார்கள். அதே கேள்வி இயக்குனரிடம் கேட்டபோது கிளைமாக்ஸுக்கு 2ம்பாகம் எடுத்து முடிக்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். 

முதல்பாகத்தில் சாம் கான் அலட்டல், மிரட்டல், வெட்டி பந்தா இல்லாமல் அமைதியாக வந்து வசனத்திலேயே காய் நகர்த்திச் செல்கிறார். காதலியை சந்திப்பது. அவரிடம் ஓட்டலில் கோபித்துக் கொண்டு சமாதானம் செய்யச் செல்வது, காருக்குள் கிஸ் அடிப்பது என மனதுக்கு நெருக்கமாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்பாதி முடிந்தபிறகு பராவா யில்லையே… ஓ.கே என்று முணுமுணுப்பு கேட்கிறது. 

2ம்பாதி தொடங்கியதும் ஹீரோ சாம் கான் காரில் ஏறி அமர்ந்து விலைமாதுவை தேடிச் செல்கிறார். போகிறார் போகிறார்.. நீண்ட தூரம் போகிறார். ஒர்க்அவுட் ஆகவில்லை. திடீரென்று காரை நட்சத்திர ஓட்டலுக்கு திருப்பி அங்குள்ள ஆண் வரவேற்பாளரிடம் தனக்கு ஒரு பெண் கிடைக்குமா என்று தயங்கி தயங்கி கேட்பதில் யதார்த்தம் காட்டுகிறார் சாம்கான். பின்னர் போலீசில் பிடிபட்டு அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தப்பிக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கப் போகிறதோ என்று பார்த்தால் முதலில் காட்டிய பிளாஷ்பேக் காட்சியான பஸ்சில் பெண் பலாத்காரம் செய்யப்படும் காட்சியை காட்டி அத்துடன் ரீல் பெட்டியை மூடிவிடுகிறார்கள். இதற்கு மேல் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதவேண்டுமென்றால் 2020ம் ஆண்டில் வெளிவரும் 2ம் பாகத்தில்தான் எழுதவேண்டும். அப்போது இப்படத்தின் 2ம் பாகம் வெளிவரும் என்று இயக்குனர் தரப்பு சொல்கிறது. எடுத்தால் பார்ப்போம்…. இப்பத்திக்கு ஜூட்தான்.

‘காதல் மட்டும் வேணா’ டைட்டில் ஓகே ஆனா…

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close