விமர்சனம்

களவாணி 2 (படவிமர்சனம்)

படம்:களவாணி 2
நடிப்பு: விமல்.ஓவியா, துரை சுதாகர். இளவரசு, சரண்யா
தயாரிப்பு: சற்குணம்
இசை மணி அமுதவன். நடராஜன் சங்கரன்.ரொனால்ட் ரீகன்
ஒளிப்பதிவு மாசாணி
இயக்கம்: சற்குணம்

களவாணித்தனம் செய்துகொண்டு ஊரை சுற்றும் விமல் குறுகியகாலத்தில் லட்சங்கள் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். அந்த நேர்ம் பார்த்து உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படுகிறது. ஊரில் பணக்காரர்கள் யாராவது தலைவர் பதவிக்கு நின்றால் அவர்களை எதிர்த்து மனு செய்துவிட்டு பின்னர் அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பேரம் பேசி தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுக்கொள்வது என திட்டமிடுகிறார். சொந்தக்கரரர்களே தேர்தலில் நிற்பதால் பேரம் பேசமுடியாமல் போகிறது. ஒரு வழியாக மனுதாக்கலும் செய்துவிடுகின்றனர், ஊரில் உள்ளவர்கள் ஒருவரும் விமலுக்கு ஒட்டுபோட மறுக்கின்றனர். தந்தை இளவரசுவே விமலுக்கு எதிராக வேலை செய்கிறார். இதையெல்லாம் தாண்டி விமல் வெற்றி பெற முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
களவாணி முதல்பாகத்தில் நடித்தவர்களே 2ம்பாகத்திலும் நடித்திருந்தாலும் கதைக்களம்வே றாக அமைத்திருக்கிறார் இயக்குனர் சற்குணம்.
முதல்பாகத்தைப்போலவே 2ம்பாகத்திலும் வேலையில்லாத வெட்டி ஆபிஸராகவே வருகிறார் விமல். ஒவியாவுடன் மல்லுக்கு நிற்கும் விமல் அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து பின்வாங்குவதும், எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து சென்று வம்பு செய்வதும் குறும்பு.

கஞ்சா கருப்பு எப்போதும்போல் விமலிடம் பணத்தை பறிகொடுத்து ஏமாறுகிறார். கஞ்சா இருந்தாலும் நகைச்சுவைக்கு பஞ்சம்தான் ஓவியாவிற்கு அதிகவாய்ப்பில்லை. தேர்தலில் போட்டியிடும்

விமலின் மாமாவாக வரும் துரை சுதாகர் வேடத்துக்கு கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். வில்லன் என்று கூறிக்கொண்டாலும் அடாவடித்தனம் இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் செய்யும் நாசுக்கான செயல்களிலும். கள்ளத்தனமான சிர்ப்பிலும் .பாங்கான பேச்சிலும் யாதார்த்தை புகுத்தி  யாரப்பா இது புதுவில்லனா  இருக்கிறாரே என பேச  வைக்கிறார். இனி பல படங்களில் துரையை பார்க்கலாம்.
சரண்யா வழக்கம்போல் வேடத்தை நிறைவு செய்கிறார். இளவரசு, விமலுக்கும் அவ்வப்போது முட்டிக்கொள்வது சுவாரஸ்யம்.

போரடிக்காமல் கலகலப்பாக படத்தை இயக்கி இருக்கும் சற்குணம். உள்ளாட்சி தேர்தலில் நடக்கும் உள்ளடிவேலைகளை அப்பட்டமாக படமாக்கி இருக்கிறார்,.

  
களவாணி 2- தேர்தல் களம்.

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close