Trending Cinemas Now
விமர்சனம்

கயிறு (பட விமர்சனம் )

படம் :கயிறு
நடிப்பு : எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ்
இசை: பிரித்வி
ஒளிப்பதிவு: ஜெயன் ஆர் உன்னிதன்
இயக்குனர்: ஐ கணேஷ்

நகரத்தில் போஸ்டர் திண்ணும் மாடுகளை பார்த்து இளைஞர் களுக்கு பூம் பூம் மாடு என்றால் என்னவென்று தெரியாது. அந்த அறிமுகம் கிடைக்கச் செய்த இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் ஒரு கைதட்டல் தரலாம்.

கிராமத்தில் பூம்பூம் மாடு வைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று குறி சொல்லும் ஹீரோ குணா யாருக்கோ சொன்ன குறி பொருத்தமாக நடக்க வில்லை என்று ஊர் பெரியவர் கூப்பிட்டு குணாவை கண்டிக்கிறார். இதில் வருத்தம் அடையும் மாட்டுக்காரன் குணா ஊரைவிட்டே புறப்பட்டு செல்கி றார். அங்கு ஒரு சாமியார் அடைக்கலம் தருகிறார். அங்கேயே தங்கி பூம்பூம் மாடு தொழில் செய்கிறார். குணா வுக்கும் அதே ஊரில் புதுக்கடை வைத்திருக்கும் காவ்யாவுக்கும் காதல் மலர்கிறது. அதற்கு காவ்யாவின் அம்மா எதிர்ப்பு தெரிவிக்கிறார். மகளின் பிடிவாதத்தை புரிந்து கொண்டு மாட்டு தொழிலை விட்டு வேலைக்கு சென்று சம்பாதித் தால் திருமணத்துக்கு சம்மதிப்பதாக காவ்யாவின் தாய் சொல்கிறார். அதை ஏற்காத குணா காதலை தூக்கி எறிகிறார். மாடு இருந்தால் தானே தொழில் செய்வாய் என்று தப்பு கணக்கு போடும் காவ்யா மாட்டை அவிழ்த்து விடுகிறார். மாடு காணாமல் போனதால் துடிதுடித்துப் போகிறார் குணா. பட்டியில் அடைபட்டுக்கிடந்த மாட்டை மீட்டுவருகிறார் . இவர்களின் காதலுக்கு குறுக்கே நிற்கக் கூடாது என்று மாடு காணாமல் செல்கிறது. அதையறிந்து கலங்கும் குணா மாட்டை கன்டுபிடித்தாரா இல்லையா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
ரொம்ப நாளைக்கு பிறகு ராஜாவின் இசையுடன் ஒரு படத்தை பார்த்தது போன்ற உணர்வு.

ஹீரோ குணாவும் ஹீரோயின் காவ்யாவும் அசல் கிராமத்து இளவட்டங்களாக வலம் வருகின்றனர். கொஞ்சமும் மாற்றமில்லாமல் பூம்பூம் மாட்டுக்காரனாக வாழ்ந்திருக்கி றார் குணா. மாடு சென்டி மென்ட், கிராமத்து காதல், ஊர் கட்டுப்பாடு என்று காட்சிக்கு காட்சி மண் மணம் கமழ்கிறது.
பூம்பூம் மாடு என்பது ஒரு தொழில் அல்ல அது ஒரு கலாச்சாரம் என்பதை ஹீரோ வாயிலாக இயக்குனர் பேச வைத்து அப்ளாஸ் பெறுகிறார்

இசை ராஜாவின் சாயலில் காற்றோடு மிதந்து வருகிறது. உலக நாடுகள் பல வற்றில் இப்படம் பரிசுகளை தட்டி வந்திருக்கிறதாம். பலமான ஹீரோ. கமர்சியல் ஹீரோயின் என்று யாரும் இல்லாத இப்படம் இங்குள்ள விருது குழு பார்வைக் காவது செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கிளைமாக்சில் இயக்குனர் கையாண்டிருக்கும் சென் டிமென்ட் ஒர்க்கவுட் ஆகும்

கயிறு – கிராமத்துடன் கட்டிபோடுகிறது.

Related posts

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். விமர்சனம்

CCCinema

சீறு (பட விமர்சனம்

CCCinema

அசுர குரு (பட விமர்சனம் )

Jai Chandran

Leave a Comment