விமர்சனம்

கணேசா மீண்டும் சந்திப்போம் (பட விமர்சனம்)

படம்: கணேசா மீண்டும் சந்திப்போம்

நடிப்பு: பிருத்வி பாண்டியராஜன், ஓவியா, ஐஎம்.விஜயன், சிங்கம்புலி, தேவிகா, மிப்பு சாமி, கிரேன் மனோகர், தீப்பெட்டி கணேசன், கிங்காங், மதுமிதா, பாவா லட்சுமணன், அம்பானி சங்கர்.
தயாரிப்பு: அருண் விக்ரமன் கிருஷ்ணன் புரொடக்‌ஷன்
இசை: நிக் சிபி
ஒளிப்பதிவு: விபின்த் வி.ராஜ்
இயக்கம்: ரதீஷ் எரேட்

மதுரையில் சின்ன சின்ன திருட்டுகள் செய்யும் பிருத்வி எதிர்பாராதவிதமாக ரவுடி காட்டாரியின் புல்லட் பைக் மீது தனது டூவீலரை மோதிவிடுகிறார். பரம்பரையாக பாதுகாத்துவரும் புல்லட்டை பிருத்வி இடித்து தள்ளியதால் கோபம் அடைந்த ரவுடி, அவரை குண்டர்களை ஏவி தாக்குகிறார். இது பிருத்வியின் கோபத்தை் அதிகரிக்கச் செய்ய அவர் புல்லட் வண்டியை ஒளித்து வைக்கிறார். கோபத்தின் உச்சிக்கு செல்லும் ரவுடியோ பிருத்வியின் காதலியை பிடித்து வைத்துக்கொள் கிறார். காதலியை மீட்பதற்காக புல்லட் ஒளித்து வைத்த இடத்தை காட்டுகிறார் பிருத்வி. ஆனால் அங்கு புல்லட்டுக்கு பதில் சைக்கிள் இருக்கிறது. அதன்பிறகு நடப்பது என்ன என்பதற்கு காமெடி ததுதம்ப பதில் அளிக்கிறது படம். 

ரவுடி கட்டாரியின் மிரட்டலால் உயிருக்கு பயந்து சென்னை வரும் பிருத்வி, பேட்டை ரவுடியை சந்தித்து உதவி கேட்க செல்ல, அவரை போலீஸ் கைது செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும்போது. தன்னை லவ் டார்ச்சர் செய்யும் ஒருவனை கொலை செய்ய வேண்டும் என்ற டீல் உடன் ஓவியா வர அவரிடம் தான்தான் ரவுடியின் ரைட் ஹேண்ட் தானே அந்த கொலையை செய்வதாக கூறி பிருத்வி பணம் கறப்பது சுவாரஸ்யம். 
சாலையில் நின்றிருக்கும் பைக்கை திருடி மெக்கானிக் கடையில் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு மெக்கானிக்கின் ஸ்கூட்டரை பிருத்வி லவட்டிச் செல்வது திருட்டில் புதுடெக்னிக்.
கட்டாரியின் ரவுடி கூட்டத்திடம் சிக்கிக்கொண்டு உயிர் தப்பிக்க ஓடியும், திருப்பி தாக்கியும் பிருத்வி ரகளை செய்கிறார். காதலி தேவிகாவிடம் அடிக்கடி கடுப்படித்து பின்னர் அவரை லவ் செய்வது சிறுபிள்ளை விளையாட்டு.
முதல்பாதிவரை வந்தாலும் கவர்ச்சிக்கு வித்திடுகிறார் ஓவியா. வெறும் வசன காட்சிகளில் மட்டுமே ஓவியாவை பயன்படுத்திவிட்டு பிருத்வியுடன் ஒரு டூயட் கூட பாடவிடாதது ஏமாற்றம். கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னர் வரும் அந்த மெலடி பாடல் வேகத்தை குறைக்கிறது. கட்டாரியாக வரும் ஐஎம் விஜயன் ஏற்கனவே திமிரு படத்தில் வில்லனாக வந்து பயமுறுத்திய வர்தான். புல்லட்டை தனது முதல் மனைவிபோல் பராமரிக்கும் அவர் அந்த புல்லட் பிருத்வி கையால் நாசமாவதை கண்டு கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது. அதற்காக ஆளையோ போட்டுத்தள்ளும் அளவுக்கு கோபப்படுவதெல்லாம் ரொம்ப ஓவர். 
சிங்கம் புலி அவ்வப்போது சிரிப்பு காட்டுகிறார்.

இயக்குனர் ரதீஷ் எரேட் காமெடியை மையப்படுத்தி கதையை நகர்த்தியிருந் தாலும் அதற்கான கருவை வலுவாக வைக்காது திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது. எடிட்டிங்கில் இன்னும் வேகம் காட்டியிருந்தால் கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்க முடியும்.

கணேசா மீண்டும் சந்திப்போம்- நகைச்சுவை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close