அரசியல்செய்திகள்பொது செய்திகள்

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம்  கைவிட வேண்டும் 

மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, ஜூன்: ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு  உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விநியோகம் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை என்றும்,  அதில் கை வைப்பது, தேன் கூட்டில் கல் வீசுவதற்கு சமம் என்பதை மத்திய உணவு மந்திரி புரிந்து கொள்ளவில்லை.  ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு” திட்டம் குறிப்பிட்ட தேதிக்குள் அமல்படுத்தப்பட்டு விடும் என்றும் “கெடு” விதிப்பது எதேச்சதிகாரமான செயல். எனவே, ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு  உள்ளிட்ட மத்திய அரசின் அறிவிப்புகளை ஆரம்ப நிலையிலேயே மாநில அரசு எதிர்க்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றன்ர்.
இவ்வாறு மு.க்.ஸ்டாலின் கூறி உள்ளார். 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close