விமர்சனம்

ஒரு கதை சொல்லட்டுமா (பட விமர்சனம்)

படம்: ஒரு கதை சொல்லட்டுமா
நடிப்பு: ரசூல்பூகுட்டி, ஜார்ஜ்குரியன், ஆல்வின், குட்டேடன், அப்ஷல் யூசுப், விஷ்ணு உரகம், சார்லி, ரேஷ்மி
தயாரிப்பு: ராஜீவ் பனகல்
இசை: ராகுல் ராஜ்
ஒளிப்பதிவு: அனியன் சித்ரசலா, நெய்ல டி குன்ஜா
இயக்கம்: பிரசாத் பிரபாகர்

கேரளா மாநிலம் திருச்சூரில் வருடா வருடம் நடக்கும் பாரம்பரிய பூரம் திருவிழாவில் 100 யானைகள், 5 லட்சம் மக்கள் திரள்வார்கள். அப்போது பாண்டிமேளம் எனப்படும் இசை ஒலிக்க, 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று மேளம் கொட்டி, வாத்தியங்களை முழங்குவார்கள். அதன் தொடர்ச்சியாக 5 மணி நேரத்துக்கு வாணவேடிக்கை நடக்கும். இந்த கண்கொள்ளா காட்சியை ஒலி வழியாகவும் ஒளி வழியாகவும் பதிவு செய்ய வேண்டும் என்பது ஆஸ்கர் வென்ற ரசூல் பூகுட்டியின் ஆசை. அதற்கான வாய்ப்பு தேடி வருகிறது. ஒலி, ஒளிப்பதிவுக்கான ஏற்பாடு களுடன் திருவிழாவில் களம் இறங்குகிறார். இந்நிலையில் ரசூலின் பணிகளில் தயாரிப்பாளர் மூக்கை நுழைத்து இது குறை அது குறை என்று தடங்கல் செய்கிறார். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளரின் அதிகாரம் ரசூலின் தன்மானத்தை தொட்டுப்பார்க்கிறது. கோபம் அடைந்த ரசூல் இதற்கு மேலும் பணியை  உதறிவிட்டு   விலகுகிறார். அவரை சந்திக்கு வரும் மாற்று திறனாளி இசை அமைப்பாளர், தான் நடத்தும் ஆசிரமத்துக்கு ரசூலை அழைத்துச் செல்கிறார். அங்கிருக்கும் மாற்றுத் திறனாளிகள் பூரம் திருவிழா இசையை பதிவு செய்ய வந்த ரசூலை பாராட்டுகின்றனர். ஆனால் அப்பணியிலிருந்து தான் விலகிவிட்டதை கூறுகிறார். ஏமாற்றம் அடையும் மாற்றுத் திறனாளிகள் ரசூலை எப்படியாவது அந்த பணியை தொடர்ந்து செய்து தங்களுக்கு பூரம் இசையை கேட்டுணர வாய்ப்பு ஏற்படுத்தி தர கேட்கின்றனர். இதில் மனம் உருகும் ரசூல் மீண்டும் அதற்கான பணிகளை மேற்கொள்கிறார். அவரது எண்ணம் ஈடுடேறுகிறதா என்பது கிளமைாக்ஸ்.

ஸ்லம் டாக் மிலினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்ற அதேநேரத்தில் அப்படத்தின் ஒலிப்பதிவிற்காக ஆஸ்கர் வென்றவர் ரசூல் பூகுட்டி. அவரது ஒரு கனவு திருச்சூர் பூரம் திருவிழாவில் ஒலி, ஒளியை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்பது. அதையே, ஒரு கதை சொல்லட்டுமா படமாக உருவாகியிருக்கிறது. 
டாக்குமென்ட்ரியாகத்தான் இதை சப்ஜெக்டை செய்ய முடியும் என்ற சூழலில் இதற்காக ஒரு கதையை வடிவமைத்து படமாக்கியிருக்கும் இயக்குனர் பிரசாத் பிரபாகர் முயற்சியும் மெச்சத்தக்கது. படம் முழுக்க நடிகராவே மாறியிருந்தாலும் தனது தன்மானத்தை எந்த இடத்திலும் விட்டுதராமல் கெத்து காட்டும் ரசூலுக்குள் உண்மை கலைஞனுக்கான கர்வமும் உள்ளடங்கியிருக்கிறது. 
சண்டை காட்சி இல்லை, ரொமான்ஸ் இல்லை, கமர்ஷியலாக இல்லை என காட்சிகளை தரம் பிரித்துப்பார்ப்பதைவிட படம் முழுக்கவே ஒரு மாநிலத்தின் கலாச்சார பயணமாகி அதுவொரு பதிவாகவும் மாறியிருப்பது படக்குழுவினரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. சவுண்ட் ரொக்கார்டிங், ரீ ரிக்கார்டிங்களில் ரசூலின் கைவண்ணம் காட்சிகளை நிஜமாக கண்முன் நிறுத்துகிறது.
ஒரு கதை சொல்லட்டுமா- ஆஸ்கர் கலைஞனின் இசைப் பயணம்.இது தேசிய. மாநில விருதுகளை தட்டிவரும்

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close