Fully Entertainment

ஐய்யப்பனை பெண்கள் தரிசிக்க தடை கேட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடெல்லி நவ: சபரிமலையில் ஐப்பனை பெண்கள் தரிசனம் செய்ய தடை எதுவும் விதிக்காமல் மறு ஆய்வு மனுக்கள் 7 பேர் கொண்ட நீதிபதிகள்  பெஞ்ச் விசாரணைக்கு 5 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் அனுப்பி வைத்தது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. சபரிமலைக்கு வந்த பெண்கள் பலரை வழி மறித்து திருப்பி அனுப்பினார்கள். ஆனாலும் சபரிமலையில் கேரள அரசு போலீசாரை குவித்து பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து ஐயப்பனை தரிசனம் செய்ய வழி ஏற்படுத்தி தந்தனர்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி நாயா் சா்வீஸ் சொசைட்டி, திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம், சபரிமலை கோயில் தந்திரி போன்றவர்கள் உள்பட 56 மறுஆய்வு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. அதன் மீதான விசாரணை வாதங்கள் மற்றும் பிதிவாதங்கள் சென்ற பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்தது. அதன் பின் தீா்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று மறுஆய்வு மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 3 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பும் இரண்டு நீதிபதிகள் ஒத்த தீர்ப்பும் எழுதி இருந்தனர். இதையடுத்து 7 பேர்கொண்ட பெரிய நீதிபதிகள் பெஞ்ச் விசாரணைக்கு மீண்டும் பரிந்துரைக்கப் பட்டது.
ஏற்கெனவே பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உத்தரவுக்கு தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே பெண்கள் சபரிமலைக்கு செல்ல தடை எதுவும் இல்லை.

#SabarimaLa Temple Aiyappa swamy
#Sabarimala review sent to a larger Bench
#Sabarimala Temple Case