விமர்சனம்

என்ஜிகே (பட விமர்சனம்)

படம்: என்ஜிகே

நடிப்பு: சூர்யா, ரகுல் ப்ரீத், சாய்பல்லவி, இளவரசன், பொன் வண்ணன், தலைவாசல் விஜய், நிகழல்கள் ரவி, பாலாசிங், உமா பத்மநாபன், கன்னட நடிகர் தேவராஜ் 
தயாரிப்பு: டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்
இயக்கம்: செல்வராகவன்

பெரிய கம்பெனியில் வேலை பார்க்கும் வேலையை விட்டு சொந்த ஊருக்கு திரும்பி இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார் சூர்யா. இதனால் பாதிக்கப்படும் உள்ளூர் வியாபாரிகள் சில அரசியல்வாதிகளின் கூட்டுடன் சூர்யாவின் நிலத்தை நாசப்படுத்துகின்றனர். அவர்களை எதுவும் செய்ய முடியவில்லையே என்று எண்ணும் சூர்யா அரசியலில் இறங்க முடிவு செய்கி றார். எம்எல்ஏ இளவரசுவிடம் உதவியாளராக சேர்ந்து தன்னை மெல்ல ெமல்ல வளர்த்துக் கொள்கிறார். கட்சியின் தலைவர் பொன்வண்ணன் உதவியாளர் ரகுல் ப்ரீத் சிங்குடன் நட்பை வளர்த்துக்கொள்ளும் சூர்யா பல்வேறு அரசியல் காரியங்களை சாதித்துகாட்டுகிறார். இதனால் ஆளும் கட்சி, எதிர்கட்சி அரசியல்வாதிகளால் வம்பு வந்து சேர்கிறது. அந்த எதிர்ப்புகளை சூர்யா எப்படி கடந்து அரசியலில் உயர்கிறார் என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது. 

காதல் கொண்டேன், ரெயின்போ காலனி படங்களில் தனக்கென ஒரு டிரெண்டை உருவாக்கிக் கொண்ட இயக்குனர் செல்வராகவன் முதன்முறையாக சூர்யாவுடன் கைகோர்த்திருக்கிறார். அதுவும் வழக்கமான முத்திரைப்படம் என்றில்லாமல் தனக்கு பரீட்சயப்படாத அரசியல் கதைக் களத்தை செல்வராகவன் தேர்வு செய்திருப்பதும் அந்த கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டு நடித்திருக்கும் சூர்யாவுக்கும் பேஷாக ஒரு கைதட்டல் போடலாம்.
நடைமுறை அரசியலை தொட்டுக்காட்டக்கூட தயங்கும் சில இயக்குனர்களுக்கு மத்தியில் அமைச்சர் ஒருவர் மீது கூறப்பட்ட பாலியல் புகார் தொடர்பான பிரச்னைகளை தொட்டிருப்பது தில். இக்காட்சிகள் ரசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 
நந்தகோபாலன் குமரன் என்று சூர்யா ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் சுருக்கம்தான் என்ஜிகே. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வெள்ளை வேட்டி. வெள்ளை சட்டைகளை விரட்டி விரட்டி அடிக்கும் பாடல் காட்சியில் நடித்த சூர்யா அந்த கருவை முழுமையாக கையிலெடுத்து இப்படத்தில் அடாவடி அரசியலை அடித்து துவம்சம் செய்திருக்கிறார். வசனக்காட்சிகளில் இன்னும்கூட துணிச்சலாக பஞ்ச் பயன்படுத்தியிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். ஒரே கெட்டப்பில் உளைச்சல் ஏற்படுத்தாமல் கட்சியின் அடிமட்ட தொண்டனாக பாத்ரூம் கிளின் செய்வதில் தொடங்கி, ரகுல் ப்ரீத்தின் காதலன், சாய் பல்லவியின் கணவர் என வெவ்வேறு முகம் காட்டியிருப்பதுடன் போராளியாகவும் தன்னை நிலைநிறுத்தி சிக்ஸர் அடித்திருக்கிறார் சூர்யா. 
சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தியிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்த நிலையில் அளவோடு நடிப்பை சுருக்கிக்கொண்டிருக்கின்றனர். இருவருக்குள் நடக்கும் சக்களாத்தி சண்டை இன்டரஸ்டிங். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் தண்டல்காரன்… ஸ்கோர் செய்கிறது. சிவகுமார் விஜயனின் கேமரா காட்சி களை இன்னும் வகைப்படுத்தியிருந்தால் கதைக்கு வித்தியாசமான எபெஃக்ட் கிடைத்திருக்கும்.
காதல் மட்டுமல்ல அரசியல் கதையையும் சொல்ல முடியும் என்று முன்னுரை காட்டியிருக்கும் செல்வராகவன் அதில் இன்னும் அழுத்தமான காட்சிகளை பதிவு செய்திருந்தால் பலம் கூடியிருக்கும்.

என்ஜிகே – வலிக்காமல் சூழலும் அரசியல் சவுக்கு.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close