பொது செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் – வரைவு வாக்காளர் பட்டியல்

பொதுமக்கள் பார்வையிடலாம்

சென்னை::பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள சாதாரண உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச் சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5564 வாக்குச் சாவடிகளும் ஆக மொத்தம் 5720 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 10-ந்தேதி மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையாளர் அலுவலகம், மண்டல அலுவலகங்களிலும், அனைத்து வார்டு அலுவலகங்களிலும், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
இந்த தகவலை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close