செய்திகள்பொது செய்திகள்

உலக கோப்பை: மேற்கிந்திய அணியை தோற்கடித்த இலங்கை அணி

கிறிஸ் கெயில். ஜூன்: உலகக்கோப்பை தொடரின் 39-வது லீக் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் இலங்கை – மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் கருணாரத்னே, குசால் பேரேரா தொடக்க வீரர்களாக ஆடினார்கள்.. கருணாரத்னே 32 ரன்களும், பெரேரா 64 ரன்களும் சேர்த்து நல்ல தொடக்கம் அமைத்தனர். அடுத்து ஆட வந்த அவிஷ்கா பெர்னாண்டோ 103 பந்தில் 104 ரன்கள் குவித்ததார். திரிமானே ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 45 ரன்கள் விளாச இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்துள்ளது. குசால் மெண்டிஸ் 39 ரன்களும், மேத்யூஸ் 26 ரன்களும் சேர்த்தனர். பிறகு 339 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய அணி களம் இறங்கிறது. கிறிஸ் கெயிலும், சுனில் அம்பரீஷ்சும் தொடக்க வீரர்களாக ஆடினர். அம்பரீஷ் 5 ரன்னிலும், கெயில் 35 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த ஹோப் (5) ஹெட்மேயர் (29) ரன் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். பின்னர் களம் வந்த நிக்கோலஸ் பூரானும், ஆலனும் ஜோடி சேர்த்தனர். ஆலன் 51.. பூரான் களத்தில் 118 ரன் எடுத்தனர்.. முடிவில் மேர்கிந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்து.23 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close