பொது செய்திகள்

உலக கோப்பை: ஆஸியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

352 ரன் எடுத்து புதிய சாதனை

லண்டன்: இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையே உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்கார்ரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். ஆஸி. அணியின் பந்துவீச்சை சமாளித்து நிதானமாக ரன்களை சேகரித் தனர். பவர்பிளே முடிவில் 10-ஆவது ஓவரின் போது விக்கெட் இழப்பின்றி 41 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. அதன் பின் இருவரும் இணைந்து ஆஸி. பந்துவீச்சை பதம் பார்த்தனர். இதன் பலனாக 19-ஆவது ஓவரில் ஸ்கோர் 100-ஐ கடந்தது. ரோஹித் சர்மா தனது 42-ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். இந்த உலகக் கோப்பையில் ஏற்கெனவே ஒரு சதம் அடித்துள்ளார் . ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களை எடுத்த நான்காவது வீரர் என்ற சிறப்பை பெற்றார் ரோஹித். சச்சின் 3077, டெஸ்மான்ட் ஹெயின்ஸ் 2262, விவ் ரிச்சர்ட்ஸ் 2187, ஆகியோர் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

ஒரு சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 70 பந்துகளில் 57ரன்களை விளாசிய ரோஹித் கோல்டர்நைல் பந்தில் அவுட்டானார். அடுத்து ஆட வந்த கேப்டன் கோலி-தவான் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். ஷிகர் தவன் தனது 17-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 6 பவுண்டரியுடன் 109 பந்துகளில் 117 ரன்களை விளாசிய தவன், ஸ்டார்க் பந்தில் லயானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்கு பின் ஆட வந்த ஹார்திக் பாண்டியா முதல் பந்தை அடித்த போது அந்த கேட்சை தவற விட்டார் ஆஸி. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே.

கேப்டன் விராட் கோலி இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 50-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். 3 சிக்ஸர், 4 பவுண்டரி யுடன் 27 பந்துகளில் 48 ரன்கள் விளாசிய ஹார்திக் பாண்டியா, பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகி அரைசதத்தை தவற விட்டார். அடுத்து வந்த தோனி அடித்த ஷாட்டை தவற விட்டார் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே. ஸ்டார்க் பந்தில் தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரி என விளாசினார் தோனி. 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 14 பந்துகளில் 27 ரன்களை விளாசிய தோனி, ஸ்டாய்னிஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவருக்கு பின் கேப்டன் கோலியும் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 77 பந்துகளில் 82 ரன்களுடன் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் வெளியேறினார். லோகேஷ் ராகுல் 11, கேதார் ஜாதவ் 0 அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களை குவித்தது இந்தியா. உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸி.அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை 352 எடுதது புதிய  சாதனை படைத்தது இந்தியா

.353 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆஸி. தரப்பில் கேப்டன் பின்ச்-டேவிட் வார்னர் இணை களமிறங் கியது. இந்திய பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்த தால், இருவரும் விக்கெட்டை நிதானமான ஆடியதால், ஸ்கோர் 11-ஆவது ஓவரில் தான் 53-ஐ கடந்தது. கேப்டன் பின்ச் ஒரு கட்டத்தில் அடித்து ஆட முயன்ற நிலையில், கேதார் ஜாதவால் ரன் அவுட் செய்யப்பட்டார். 36 ரன்கள் எடுத்து வெளியேறினார் பின்ச். பிறகு ஸ்மித்-வார்னர் இணைந்து ஸ்கோரை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். ஒருமுனையில் சிறப்பாக ஆடி வந்த வார்னர் தனது 19-ஆவது ஒரு நாள் அரைசதத்தை பதிவு செய்தார்.

இந்திய தரப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த வார்னர் 56 ரன்களுடன் சஹல் பந்தில் அவுட்டானார். ஸ்மித் 21-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்து 69 ரன்களுடனும், உஸ்மான் காஜா 48 ரன்களுடனும் வெளியேறினர். நாதன் கோல்டர் நைல் 4, பேட் கம்மின்ஸ் 8, ஸ்டார்க் 3, ஆடம் ஸம்பா 1 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். இறுதியில் 50 ஓவர்களில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 6-61, புவனேஸ்வர் குமார் 3-50, சஹல் 2-62 விக்கெட்டுகளை வீழ்த்தினர். .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close