பொது செய்திகள்விமர்சனம்

உலகக்கோப்பை மேற்கிந்திய தீவு அணி வெற்றி

பாகிஸ்தான் சுருண்டது

நாட்டிங்காம், உலகக் கோப்பை கிரிக்கெட் 2–வது போட்டியில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவு அணி அணிகள் மோதின. . டாஸ் வென்ற மேற்கிந்திய் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் வீரர்கள் இமாம் உல்–ஹக் 2 ரன், பஹார் ஜமான் 22 ரன், ஹாரிஸ் சோகைல் 8 ரன், பாபர் அசாம் 22 ரன், சர்ப்ராஸ் அகமது 8 ரன், இமாத் வாசிம் 1 ரன், ஷதப்கான் 0 ரன், ஹசன் அலி 1 ரன், வஹாப் 18 ரன் என அடுத்தடுத்து மேற்கிந்திய பந்து வீச்சாலர்களிடம் தங்களது விக்கெட்டுகளை சொற்ப ரன்னில் பறிகொடுத்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை எடுத்தது.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவு அணி 13.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (108 ரன்கள்) இலக்கை எட்டியது. இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close