Fully Entertainment

இலங்கை அதிபரானார் கோத்தபய ராஜபக்சே..

கொழுப்பு நவ: எட்டாவதுஇலங்கை அதிபருக்கான தோ்தல் நவம்பர் 16ம் தேதி நடந்தது. மொத்தம் 12,845 வாக்குச் சாவடிகளில் இலங்கை நாடு முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது, இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்சே (வயது70), மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசா (வயது 52) வேட்பாளர் களாக போட்டியிட்டனர். இவர்களில் சஜித் முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகன் ஆவார்., இவர்களைத் தவிர மேலும் 35 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
1.59 கோடி போ் வாக்குரிமை பெற்றிருந்தனர். சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. 8-ஆவது அதிபா் தோ்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபடக்சே வெற்றிபெற்றார்.
இவர் 52.25 சதவீத வாக்குகள் (6, 924, 255) வாக்குகள் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியைச் சோ்ந்த சஜித் பிரேமதாசவைவிட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அதிகமாகப் பெற்றார்.
இதையடுத்து திங்கட்கிழமை கோத்தப ராஜபக்சே இலங்கை அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

#Gotabaya Rajapaksa wins Sri Lankan presidential election