செய்திகள்பொது செய்திகள்

இந்திய அணி அதிர்ச்சி தோல்வியால் இறுதிப்போட்டிக்குள் நியூசிலாந்து

மான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் அதன் பிறகு ஆட்டத்தை தொடர இயலவில்லை.
அரைஇறுதிசுற்றுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு என்பதால் மறுநாள் இந்த ஆட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடந்தது.
அதன்படி தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடியது, நடப்பு தொடரில் 5 சதங்கள் விளாசிய ரோகித் சர்மா 1 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலும் 1 ரன்னில் அவுட் ஆனார், இதைத் தொடர்ந்து 5–வது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்டும், ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து மீட்டெடுக்க போராடினர். ஸ்கோர் 71 ரன்களை எட்டிய போது ரிஷாப் பண்ட் அவுட ஆனார். ஹர்திக் பாண்ட்யாவும் 32 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இக்கட்டான சூழலில் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் ஜோடிசேர்ந்து அணியை ரன்கள் குவித்து நம்பிக்கை துளிர்விடவைத்தனர். ஜடேஜா 39 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். உலக கோப்பை கிரிக்கெட்டில் 8–வது வரிசையில் இறங்கி அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையோடு அவர் தொடர்ந்து மட்டையை சுழற்றினார். அவருக்கு டோனி நன்கு ஒத்துழைப்பு தந்தார். இதில் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். அது அதிக நேரம் நீடிக்கவிலை. கடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பரபரப்பான கட்டத்தில் ஜடேஜா 77 ரன்னில் ஆனார். டோனிதான் இந்திய அணியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் (50 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். அத்துடன் இந்தியாவின் உலககோப்பைகனவு தகர்ந்தது. இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி, போட்டியில் இருந்து வெளியேறியது. நியூசிலாந்த்து அணி வெற்றிகளிப்புடன் இறுதிசுற்றுக்குள் நுழைந்தது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close