செய்திகள்பொது செய்திகள்

இங்கிலாந்து-நியூஸிலாந்து இறுதிபோட்டியில் நாளை மோதல்

2019 கிரிக்கெட் உலக கோப்பை யாருக்கு?

லண்டன்: 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த மே மாதம் 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன.
லீக் சுற்றின் முடிவில் இந்தியா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முறையே எதிர் அணிகள் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மதியம் 3 மணிக்கு நடக்க உள்ளது.

இங்கிலாந்தை பொருத்தவரை தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜோனி பேர்ஸ்டோவ் அதிரடியான ஆட்டத்தின் மூலம் எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்து வருகின்றனர். கேப்டன் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் போன்றவர்கள் எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை சரியான சமயத்தில் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுக்கின்றனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள் .உலக கோப்பையை வெல்ல இரு அணிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால்  கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை காண தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close