செய்திகள்பொது செய்திகள்

இங்கிலாந்திடம் தோற்ற இந்தியா

டோனிக்கு என்ன ஆச்சு- கடும் விமர்சனம்

பர்மிங்காம்: ஜூன்: பர்மிங்காமில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் 38-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோற்றது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜானி பேர்ஸ்டோ. ஜாசன் ராய் தொடக்க வீரர்களாக ஆடினார்கள். அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். ஜாசன் ராய் 66 ரன்களில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார்.
கேப்டன் இயான் மோர்கன் 1 ரன்னில், ஜோ ரூட் 44 ரன்னிலும்,ஜோஸ் பட்லர் 20 ரன்னிலும்,வோக்ஸ் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். மொத்தம் 50 ஒவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் ரோகித் சர்மாவுடன் இணைந்த கேப்டன் விராட் கோலி 66 ரன்களில் பிளங்கெட் பந்து வீச்சில் அவுட் ஆனார். ரோகித் சர்மா 102 ரன்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சின் போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ரிஷப் பந்த் 32 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து டோனியுடன் ஜோடி சேர்ந்த ஷர்திக் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனி 42 ரன்களுடனும் கேதர் ஜாதவ் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ரன்கள் எடுத்து. 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் இந்தியாவை தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணியின் பிளங்கெட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் டோனியின் ஆட்டத்தை பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவரது ஆட்டம் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதையடுத்து டோனியை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.
இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணி புள்ளிகள் அடிப்படையில் அரை இறுதிக்குள் நுழைய அதிக வாய்ப்பிருக்கும். இங்கிலாந்து போட்டியை விட்டு வெளிவேறியிருக்கும். பாகிஸ்தான் அணிக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தராத வகையில் இந்திய அணிக்கு பலர் பாராட்டும் தெரிவித்திருக்கின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close