செய்திகள்பொது செய்திகள்

ஆஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் இங்கிலாந்து

பர்மிங்காம்: உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைய நடந்த மற்றொருபோட்டிக்கான அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை விழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தெர்வு செய்தது. டேவிட் வார்னரும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். ஆரோன் பிஞ்ச் டக் ஆகி வெளியேறினார். வார்னர் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பும் 4 ரன்னில் அவுட் ஆனார். .
பின்னர் ஆடிய ஸ்டீவன் சுமித்தும், அலெக்ஸ் கேரியும் இணைந்து அணியை படிப்படியாக ரன்ரேட்டையும் 4 ரன்களுக்கு மேலாக கொண்டு சென்றனர். 24.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. அணியின் ஸ்கோர் 117 ரன்களாக 45 ரன்களில் அவுட் ஆனார்.
ஸ்டீவன் சுமித் தொடர்ந்து போராடினாலும் இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. மேக்ஸ்வெல் 22 ரன்களில் வெளியேறினார், ஸ்டீவன் சுமித் (85 ரன் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 223 ரன்களுக்கு முடங்கியது.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்தின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
லண்டன் லார்ட்சில் வருகிற 14-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close