அரசியல்சினிமா செய்திகள்பொது செய்திகள்

ஆழ்துளை கிணறு சோகம் குழந்தை சுஜித் உடல் மீட்பு

பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம்

முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின், ரஜினி திரையுலகினர் இரங்கல்

திருச்சி அக்: திருச்சி மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித், 400 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணியில் அதிகாரிகள். பொறியியல் வல்லுனர்கள் அடுபட்ட்துடன் ராட்சத எந்திரங்களின் உதவியுடன் மீட்பு பணி நடைபெற்றது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சனிக்கிழமை வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மீட்புப் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சுஜீத் உடல் நேற்று நள்ளிரவில் இறந்த சடலமாக மீட்கப்ப்ட்டது.
இதுதொடர்பாக நேற்று இரவு 2.35 மணி அளவில் பேட்டி அளித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், குழந்தை சுஜித் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இரவு 10.30 மணி அளவில் இருந்து ஆழ்துளை கிணற்றில் துர்நாற்றம் வருகிறது எனவும் குழந்தையின் உடல் சிதைந்ததால் இந்த துர்நாற்றம் வருகிறது என்று தெரிவித்தார். மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் வழிகாட்டுதலின் படி குழந்தையின் உடலை மீட்க அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் உடலை தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டனர். பின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் அப்பகுதியில் உடல் உள்ள பாத்திமாபுதூர் கல்லறையில் செவ்வாய்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து ஆழ்த்துளைக் கிணறு மற்றும் குழந்தை சுஜித்தை மீட்க தோண்டப்பட்ட அனைத்து குழிகளும் கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டது.
குழந்தை சுஜீத் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்க அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க,ஸ்டாலின், ந்டிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் விமல். லாரன்ஸ். விவேக் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இரங்கல்தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close