Fully Entertainment

ஆறடி (பட விமர்சனம்)

படம்: ஆறடி
நடிப்பு:விஜயராஜ், தீபிகா ரங்கராஜு, சாப்ளின் பாலு, ஜீவிதா, சுப்புராஜ், டாம் பிராங்க், சண்முகம், சுமதி, மாக்கான், ஜெயமணி, பெஞ்சமின், தினேஷ், சிபிபத்ரிநாத்
தயாரிப்பு:ஸ்ரீ சிவ குடும்பம் பிலிம்ஸ்
இணை தயாரிப்பு: சண்முகம், துரைராஜ்
இசை: அபி ஜோ ஜோ
ஒளிப்பதிவு: ஆர்.கே.விஜயன்
இயக்கம்: சந்தோஷ்குமார்

சுடுகாட்டில் வெட்டியான் தொழில் செய்யும் சாப்ளின் பாலுவிற்கு ஒரு மகன், 2 மகள்கள். வெட்டியான் தொழிலில் வரும் வருமானத்தை வைத்து கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்க் கிறார். ஒரு கட்டத்தில் சாப்ளினும், அவரது மகனும் மின்சாரம் தாக்கி பாதிப்புக்குள்ளா கின்றனர். மகன் இறக்க சாப்ளின் பக்கவாதத் தில் பாதிக்கப்படுகிறார். குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை மூத்த மகள் தீபிகாவும். இளைய மகளும் ஏற்கின்றனர். தந்தை செய்த தொழிலை தீபிகா ஏற்று பிணங் களை அடக்கம் செய்தல், தகனம் செய்தல் பணிகளை மேற்கொள்ள இளைய மகள் கொட்டு அடித்து அக்காவுக்கு உதவியாக இருக்கிறார். தீபிகா மீது காதல் கொள்கிறார் விஜயராஜ். இதைகவனித்த தீபிகா அவரை அழைத்து கண்டிக்கிறார். அவர் உண்மையி லேயே தன்னை காதலிப்பதை தெரிந்து கொள்ளும் தீபிகா காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார். விஜயராஜ் பெற்றோரை அழைத்து வந்து பெண் பார்க்கிறார். ஓலை குடிசையில் இருக்கும் தீபிகாவின் ஏழ்மை அவரது தொழிலை கண்டு அதிர்ச்சி அடையும் தந்தையோ, தீபிகாவை மருமகளாக ஏற்க வரதட்சணை கேட்கிறார். வரதட்சணை தர தீபிகாவின் தந்தை சாப்ளின் பாலு ஒப்புக் கொள்கிறார். நிச்சயதார்த்தம் ஏற்பாடாகிறது. இதற்கிடையில் தான் கொண்டு வந்த பணத்தை தவறவிட்டுவிடுகிறார் சாப்ளின். அதை மாப்பிள்ளை வீட்டார் நம்ப மறுக்கின் றனர். அதன்பிறகு நடப்பது என்பதை உருக்கமாக விளக்குகிறது கிளைமாக்ஸ்.

ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதை என்று பல ஹீரோயின்கள் ஆக்‌ஷன், திகில்.கிரைம், திரில்லர் படங்களில் நடிக்கின்றனர். உண்மை யிலேயே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றால் ஆறடி படத்தில் தீபிகா ஏற்றிருக்கும் ரோலைபோன்று இருக்க வேண்டும். முதல் படத்திலேயே கடினமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் தீபிகா இப்படிக்கூட ஒருவரால் நடிக்க முடியுமா என்று அதிசயிக்க வைக்கிறார்.
சவுக்குழி தோண்டுவதும், உறவுமுறைகளை பால் ஊற்ற, மண் தள்ள அழைப்பதும் என நிஜ வெட்டியாள் தொழிலாளியாகவே மாறியிருக் கிறார். தன் மீதும், தங்கை மீதும் யார் கவன மும் திரும்பக்கூடாது என்பதற்காக அழுக்கான உடை, கலைந்துகிடக்கும் தலை முடியுடன் நடமாடுவதும் தனது தங்கையையும் அதே போல் மாற்றி அதற்கு விளக்கம் அளிப்பதும் பொருத்தம்.
தன்னை சைட் அடிக்க ஒவ்வொரு சவஊர் வலத்திலும் கலந்துகொண்டு சுடுகாட்டுக்கு வரும் விஜய்ராஜை மக்களிடம் மாட்டிவிட்டு கள்ளத்தனமாக தீபிகா சிரிப்பது அழகு. நேரடியாக வந்து தன் காதலை விஜய் ராஜ் சொன்னபிறகு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதும் செல்போனில் தனது தங்கையிடம் அடிக்கடி பேசி தூதுவிடுவதை ரசிப்பதும், கருவிழிகளை உருட்டி அச்சர்யத்தை வெளிப் படுத்துவதுமாக நடிப்பில் வெரெய்ட்டி காட்டுகிறார் தீபிகா. தங்கையாக வரும் ஜீவிதாவும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்.
குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி தீபிகாவைத் தான் மணப்பேன் என உறுதியுடன் இருக்கும் ஹீரோ விஜய் ராஜும், வெட்டியானாக வரும் சாப்ளின் பாலு மனதில் இடம்பிடிக்கின்றனர்.
ஆர்.கே.விஜயன் உள்ளதை உள்ளபடி படம் பிடித்திருக்கிறார். காட்சி களுக்கு ஏற்ப அபி ஜோ ஜோ அமைத்திருக்கும் இசை ரசிக்க வைக்கிறது. இப்படியொரு கதை அம்சத்தை தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளரின் துணிச் சலையும் பாராட்டியே ஆக வேண்டும். இந்த படம் தேசிய விருக்காக அனுப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. நியாயப்படி இப்படம் ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகளை அள்ள வேண்டும்….! பார்க்கலாம்…
எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு படமாக தந்திருக்கும் இயக்குனர் சந்தோஷ்குமார் சுடுகாட்டு பின்னணி கதை என்பதால் வெறும் விரக்தியோடு அமைத்துவிடாமல் அதிலும் ஒரு காதல். காதலுக்குள் ஒரு நகைக்சுவை, சீர்திருத்த திருமண முயற்சி என்று பல அம்சங் களை திரைக்கதையாக்கி ருசியாக்கியிருக் கிறார். பித்தன் என்ற வார்த்தைக்கு அவர் படத்தில் காட்டியிருக்கும் விளக்கம் திகிலடைய வைக்கிறது.
‘ஆறடி’ புரட்சி விதை.

Gold star