Fully Entertainment

ஆக்‌ஷன் (பட விமர்சனம்)

படம்:  ஆக்‌ஷன்
நடிப்பு:விஷால் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, சாயாசிங். யோகிபாபு. ராம்கி. பழ.கருப்பையா. அகன்ஷா புரி, கபீர்சிங். வின்சென்ட் அசோகன்
தயாரிப்பு: ஆ.ரவீந்திரன்
இசை: ஹிப்ஹாப் ஆதி
ஓளிப்பதிவு: டுட்லே
இயக்குனர் : சுந்தர் சி.

முதல்வர் பழ.கருப்பையா தனது வருங்கால வாரிசாக மூத்த மகன் ராம்கியை அறிவிக்கி றார். இளையமகன் விஷால் ராணுவத்தில் கர்னலாக இருக்கிறார். இந்நிலையில் பிரதமரை தனது மாநிலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கேட்கிறார். முதலில் வர ஒப்புக்கொள்ளும் பிரதமர் பாதுகாப்பு காரணங்களுக்காக வரமாட்டார் என்று முதல்வரின் வலது கையாக செயல்படும் நபர் சொல்கிறார். ஆனால் தங்களால் பாதுகாப்பு தர முடியும் என்று ராம்கி உறுதி தருகிறார். அதை யேற்று பிரதமர் வருகிறார். இதற்கிடையில் வின்சென் அசோகன் ராம்கியின் சிபாரிசில் பல கோடிகளை வங்கியிலிருந்து கடன் பெற்றுக்கொண்டு நாட்டை விட்டு ஓடுகிறார். இந்நிலையில் தங்கள் மாநிலத்துக்கு வரும் பிரதமரின் விழா வேலைகளில் பிஸியாகிறார் ராம்கி. கூட்டம் பிரமாண்டமாக நடக்கிறது. அப்போது குண்டு வெடித்து பிரதமர் கொல்லப்படுகிறார். ராம்கியும் தற்கொலை செய்துகொள்கிறார். குண்டு வெடித்து பிரதமரை கொன்றது யார் என்பதை கண்டு பிடிக்க களத்தில் குதிக்கிறார் விஷால். அவரால் அதை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
காமெடி கதைகளையே இயக்கி வந்த சுந்தர்.சி.சில வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் காமெடி களத்திலிருந்து மாறி முழுக்க ஹாலிவுட் பாணியில் அதிரடி ஆக்‌ஷன் படத்தை ஆக்‌ஷன் என்ற பெயரிலேயே இயக்கி இருக்கிறார்.
குண்டு வைத்த தீவிரவாதியை கண்டு பிடிப்பதுதான் கதை என்றாலும் சுந்தர். சியிடமிருந்து இப்படியொரு ஆக்‌ஷன் படத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சுந்தர்.சி,விஷால், தமன்னாவின் கடினமான உழைப்பு கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
விஷாலிடமிருந்து மிகப் பெரிய ஆக்‌ஷ்ன் வெளிப்பட்டிருக்கிறது. கட்டிடங்கள் மீது ஓடுவது. டூவீல்ரில் பறப்பது என ஆங்கில படங்களுக்கு இணையான ஸ்டண்ட் நடத்தி காட்டியிருக்கிறார்.
தமன்னா விஷாலுடன் நன்றாக ரன்னிங் ரேஸ் ஓடியிருக்கிறார். காதலிக்க கட்டிப்பிடிக்க வெல்லாம் நேரமில்லை என்பதற்காக பாடல் காட்சியொன்றில் தம்ன்னாவுக்கு சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணியவைத்து இளசுகளுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள் .
அகன்ஷா புரி பண்த்துக்காக யாரை வேண்டுமானாலும் கொல்லும் கூலிப் படையாக நடித்திருக்கிறார். இவரும் டூ பீஸ் நீச்சல் உடையில் ரசிகர்களை காட்டிப் போடுகிறார். ஹேக்கராக வரும் யோகிபாபு அவ்வப்போது காமெடியாக பேசி சிரிக்க வைக்கிறார்.
சாயாசிங் நீண்ட நாட்களுக்கு பிறகு தலை காட்டியிருக்கிறார். தீவிரவாதியாக வரும் கபீர்சிங் வேடத்துக்கு கனக்கச்சிதமாக பொருந்துகிறார்.

பாதுகாப்பு நிறைந்த வங்கிக்குள் சர்வ சாதாரணமாக தமன்னா விஷால் நுழைந்து பணத்தை ட்ரான்ஸ்பர் செய்வதெல்லாம் நம்பமுடியாத காட்சிகள். அதில் இன்னும் சிரியஸ்னெஸ் இருந்திருக்க லாம் . ஐஸ்வர்யா லட்சுமிக்கு சொல்லும்படி வாய்ப்பு இல்லை.
ஹிப்ஹாப் ஆதி இசை பெரிதாக சோபிக்க வில்லை. பின்னணி இசையில் கொஞ்சம் அதிரடி காட்டியிருக்கிறார். துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் காட்சிகளை ரிச்சாக படமாக்கியிருக்கிறார்கள்.
ஆக்‌ஷன்- கதை பழசு அதிரடி புதுசு.