Fully Entertainment

அவனே ஸ்ரீமன் நாராயணா (பட விமர்சனம்)

புதையலை தேடும் பெருங்கூட்டம்

படம்: அவனே ஸ்ரீமன் நாரயாணா
நடிப்பு: ரக்‌ஷித் ஷெட்டி. ஷான்வி ஸ்ரீவஸ்தா. பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி. மதுசூதனன் ராவ். அசுயுத் குமார். கோகுலகிருஷ்ண ஹேஷ்பாண்டே
தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ்
இசை: அஜ்நீஷ் லோக்நாத் அண்ட் சரண்ராஜ்
ஒளிப்பதிவு: கரம் சாவ்லா
இயக்கம் : சச்சின்
பழங்கால அமராவதி என்ற சிறிய நகரில் அபிரார்கள் என்ற கொள்ளை கூட்டம் அட்டகாசம் இருக்கிறது. அப்பகுதியில் மறைத்து வைக்கப் பட்டுள்ள தங்க புதையலை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது அபிரர்கள் கூட்டம். அதற்கு முன்னதாக பக்தி நாடகங்கள் நடத்தும் ஒரு குழு புதையலை எடுத்துச் செல்கிறது. மரணப்படுக்கை யிலிருக்கும் கொள்ளையர்களின் தலைவன் அந்த நாடக்குழுவை பிடித்து பழிவாங்கச் சொல்வதுடன் தனக்கு பிறகு யார் தலைவன் பொறுப்புக்கு வருவது என்பதை சொல்லாமல் செத்துவிடுகிறார். இரண்டு பெட்டாட்டிக்காரன் என்பதால் முதல் மனைவியின் பிள்ளை தலைவன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இரண்டாவது பிள்ளையின் மகனை விரட்டிவிடுகிறார். கோட்டையை விரட்டப்பட்டவன் எப்போது அண்ணனை பழிவாங்கலாம் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறான். அந்த நேரம்பார்த்து வரும் போலீஸ் அதிகாரி ரக்‌ஷித்துக்கு புதையல் இருக்கும் விவரம் தெரியவர அவர் அண்ணன், தம்பிக்கு தூது சொல்வதுபோல் சென்று புதையலை கைப்பற்ற எண்ணுகிறார். இதற்கிடையில் புதையலை கைப்பற்றிய நாடகக் குழு அதை ரகசிய இடத்தில் ஒளித்து வைக்கிறது. புதையல் இருக்கும் இடம்பற்றி நாடகத்தில் வரும் ஒரு பாடலில் மறைத்து இணைத்துவிடுகிறார்கள். கடைசியில் அந்த புதையல் யார் கைக்கு செல்கிறது என்பதே கதை.

கன்னடத்திலிருந்து தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தை போலவே கன்னடத் திலிருந்து தமிழுக்கு வந்திருக்கிறது ரக்‌ஷித் ஷெட்டி நடித்துள்ள அவனே ஸ்ரீமன் நாராயணா
பேன்டசியாக உருவாக்கப்படிருக்கும் கற்பனைக் கதை என்றாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லா மல் காட்சிகளும். ரக்‌ஷித்தின் நடிப்பும் படத்தை விறுவிறுப்பாக கடைசிவரை கொண்டு செல்கிறது. எந்த காலத்து கதை என்ற லாஜிக்கும் இதில் பார்க்க வேண்டியதில்லை. ரக்‌ஷித் ஷெட்டியை சூப்பர் பவர் கொண்ட ஹீரோவாக காட்டாமல் அடித்தால் ரத்தம் வழிய அடிவாங்குவதும் அடி கொடுத்தால் அடிவாங்கியவர்கள் அந்தர் பல்டி அடிக்கும் அளவுக்கு நம்பும்படியான ஹீரோவாக காட்டியி ருப்பதுதான் கதாபாத்திரதுக்கு கிடைத்த வெற்றி.
கொள்ளைக் கூட்ட தலைவனை நேரில் சந்திக்கச் சென்று காவலாளிகளால் மாட்டிகொள்வதும் சாமர்த்தியமாக காவலாளிகள் சொல்லும் புகார்களை அவர்கள் மீதே திருப்பிவிட்டு அவர்களையே பதிலுக்கு சிக்கவைப்பதும் லக லக.
சண்டை காட்சிகளில் அதிரடி காட்டும் ரக்‌ஷித் அந்த கதாபதிரத்துக்ககாக அவர் கடைபிடிக்குக் மேனரிஸம், பைரேட்ஸ் ஆப் கரீபியன் ஹீரோ ஜானி டெப்பின் மேனரிஸத்தை ஞாபகப்படுத்து கிறது. சொதப்பல் இல்லாமல் அளவுடன் நடித்தி ருப்பதால் அந்த ஸ்டைலும் கண்ணுக்குள் ளேயே நிற்கிறது.
ஹீரோயின் ஷான்வி ஸ்ரீவஸ்தவா வேடத்துக்கு ரொம்பவே பொருத்தம். ஒவர் ஆக்டிங் இல்லாமல் இயல்பாக நடித்து கவர்கிறார்.
பிரமாண்ட அரங்கம் என்றாலும் பழமையை புகுத்தியிருப்பது கதைக்கு பலம். அதேபோல் அந்த காட்டு நந்தவனமும். பார்க் கடலை கடையும் புராண காட்சியின் விளக்கமும் எல்லா குழப்பத் தையும் தீர்க்கிறது. அஜ்நீஷ் லோக்நாத் அண்ட் சரண்ராஜ் பின்னணி இசை கதையோடு இழை யோடுகிறது. கரம் சாவ்லா ஒளிப்பதிவு பகட்டு காட்டாமல் அடக்கி வாசித்திருக்கிறது.
வசன உச்சரிப்பும். லிப் சிங்க்கும் பொருத்தமாக இருப்பதால் அசல் தமிழ்படம் பார்த்த உணர்வு.

அவனே ஸ்ரீமன் நாராயணா – குடும்பத்தோடு ரசிக்கலாம்.