Fully Entertainment

அரசியல் கட்சி தொடங்கும்வரை சினிமாவில் நடிப்பேன்

சென்னை, நவ:

அரசியல் கட்சி தொடங்கும்வரை சினிமாவில் நடிபேன் என்றார் ரஜினிகாந்த்;
நடிகர் ரஜினிகாந்த் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:-
என்னை பாரதீய ஜனதா உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்கிறது. பாரதீய ஜனதா எனக்கு எந்த அழைப்பையும் விடுக்கவில்லை. எனக்கும் , திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இருவருமே மாட்டமாட்டோம்.
திருவள்ளுவருக்கு பாஜக காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம். உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடும் எண்ணம் இல்லை.திருவள்ளுவர் போன்ற ஞானிகள், மதம் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது. மத்திய அரசு எனக்கு விருது அளிப்பதற்கு நன்றி
இதையடுத்து, சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:-
நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன். நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன. சிலர் பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள். அரசியலில் இது சகஜம். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். எம்.ஜி.ஆர் கூட கட்சி தொடங்கி முதல்வராகும் வரை தொடர்ந்து படங்களில் நடித்தார். அதுபோல் நானும் கட்சி தொடங்கும் வரைநடிப்பேன்
இவ்வாறு ரஜினிகூறினார்.
#Rajini latest interiew
#In TamilNadu Vavcant for Leader post:Rajini