விமர்சனம்

அயோக்யா (பட விமர்சனம்)

 படம்:அயோக்யா
நடிப்பு: விஷால், பார்த்திபன், ராஷி கண்ணா, பூஜா தேவரியா.எம்,எஸ்,பாஸ்கர். ஆனந்த்ராஜ்.
ஒளிப்பதிவு: விஐ கார்த்திக்
இசை: சாம்.சி.எஸ்.
இயக்கம்: வெங்கட் மோகன்

சிறுவயதில் பெற்றோரை இழந்த விஷால், தன்னை வளர்க்கும் ஆனந்தராஜின் பேச்சை கேட்டு சின்ன சின்ன திருட்டு செய்கிறார. திருட்டுபவனை விட போலீஸுக்குஅதிக பவர் இருப்பதை தெரிந்துகொண்டு போலீஸ் ஆக முடிவு செய்யும் விஷால் அதற்காக படித்து சில தில்லுமுள்ளு செய்து போலீஸ் ஆகிறார். ரவுடி பார்த்திபன் தனது தம்பிகளை வைத்து கடத்தல் தொழில் செய்கிறார். அவர்களுக்கு இடையூறு செய்யும் போலீஸ் அதிகாரியை மாற்றிவிட்டு பிரச்சனை இல்லாத போலீஸ் ஒருவரை அனுப்பும்படி மந்திரி சந்தானபாரதியிடம் கேட்கிறார் பார்த்திபன். இதையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக விஷால் வருகிறார். பார்த்திபன் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாத விஷால் அவரிடம் பணம் வாங்குகிறார். இந்நிலையில், பூஜா தேவரியா தனது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் தர முயல்கிறார். அவரை கடத்தி கொலை நினைக்கும் பார்த்திபன் கும்பல், பூஜாவுக்கு பதில் ராஷி கண்ணா கடத்தி செல்கின்றனர். தனது காதலியான ராஷி கண்ணா கடத்தப்பட்டது தெரிந்ததும் அவரை மீட்கிறார். இதனால்  பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இறுதியில் மோதலில் வழக்கம்போல் ஹீரோதான் ஜெயிக்கி றார் என்ற கிளைமாக்ஸை யூகிக்கவும் சொல்ல வேண்டுமோ?
போலீஸ் அதிகாரியாக ஏற்கனவே சில படன்களில் நடித்திருக்கும் விஷால் இப்படத்தில் காக்கிச்சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாகவே வருகிறார். பார்த்திபனிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர் செய்யும் கடத்தல் தொழிலை கண்டுகொள்ளாமல்விடும்போது அந்த கேரக்டரையே வெறுப்புக்குள்ளாக்குகிறது. பிறகு தவறை உணர்ந்து விஷால் செய்யும் தியாகம், கேரக்டர் மீது ஏற்பட்ட வெறுப்பை மாற்றி நம்பிக்கை பிறக்க வைக்கிறது. பைட் டயலாக், சீன் என எல்லாவற்றிலும் விஷாலுக்கு பில்டப் கொடுத்திருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் பொளந்து தள்ளுகிறார் விஷால்.
தொழில் ரீதியாக பார்த்திபனை கண்டுகொள்ளாமலிருக்கும் விஷால் பின்னர் அவரிடம் மோதலுக்கு தயாரானதும் கீறியும் பாம்புக்குமான மோதலாக மாறி காட்சிகள் பரபரக்கிறது. ராசி கண்ணா அழகு பதுமையாக வந்துபோகிறார்.
நல்லவனாக நடிப்பதா? கெட்டவனாக நடிப்பதா? என்ற குழப்பத்திலேேய இத்தனை நாள் கதாபாத்திரங்களை ஒப்புக்கொண்டிருந்த பார்த்திபன் இப்படத்தில் கெட்டவனாகவே நடித்து தனது குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். நக்கல், நய்யாண்டி, எகத்தாளம் என ஏகத்துக்கு தனது புதுப்புது முத்திரைகளை பதித்திருக்கிறார். குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்து மனதை கவர்க்கிறார்

கே.எஸ்.ரவிகுமார். தவறுகள் செய்யும்போது விஷாலுக்கு சல்யூட் அடிக்க மறுப்பதும் பின்னர் அவர் திருந்தி அநியாயத்தை எதிர்க்கும்போது சல்யூட் செய்வதும் கெத்து. எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் தங்களது பங்களிப்பை நிறைவு செய்திருக் கின்றனர். யோகி பாபுக்கு கால்ஷீட் பிராப்ளம்போல் தெரிகிறது. காமெடிக்கு பஞ்சம் வைத்து விடுகிறார்.
தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி இருக்கிறது. அந்த எபஃக்டோ என்னவோ? அயோக்யாவிலும் தெலுங்கு மசாலா மணக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்மோகன். முழுமை யான ஒரு ஆக்‌ஷன் படமாக தந்து இயக்குனர் பொறுப்புக்கு நியாயம் செய்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சோடை போகவில்லை. 
`அயோக்யா’ விஷாலின் ஆக்‌ஷன் அதிரடி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close