அரசியல்சினிமா செய்திகள்செய்திகள்பொது செய்திகள்

அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு கிடையாது

ஐகோர்ட் உத்தரவு: மீண்டும் காண 40 வருடமாகும்

சென்னை ஆக. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் எழுந்தருளிபக்தர் களுக்கு கடந்த 44 நாளாக தரிசனம் அளித்து வருகிறார். இதுவரை பல லட்சக்கணக்கான பக்தர் கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலி ருந்து வந்து தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதருக்கு, தினம் தினம் வெவ்வேறு நிற பட்டாடைகள் உடுத்தியும். மலர் அலங்காரம் செய்தும் சிறப்பு புஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய பிரமுகர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் வரிசையிலும் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காணப்பட்டது. பொது தரிசனத்திலும் லட்சக்கணக்கான்வர்கள் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். கடந்த 44 நாட்களாக நடைபெற்று வரும் இப்பெருவிழா 48வது நாளான ஆகஸ்ட் 17ம் தேதி நிறைவடைகிறது.
அத்திவரதர் தரிசனம் நீட்டிக்க முடியாது:
இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவரான சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது அத்திவரதர் தரிசனத்தை 10 நாட்கள் நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் பரிசீலித்து வருவதாக மனுதாரர் தரப்பில் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு தரப்பில் தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, கோயில் விவகாரம் தொடர் பாக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் தான் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து வரும் 17ந்தேதி அத்திவரதர் ஆகம முறைப்படி மீண்டும் குளத்தில் சயனம் கொள்ள விருக்கிறார். மீண்டும் அத்திவரதரை தரிசனம் செய்ய இன்னும் 40 வருடம் காத்திருக்க வேண்டும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close